OR

Show

Close


OR

Show

Close

Sunira Sumi

சமூகம்


அன்பாக பேசினால்
அலைகிறவள்....

கோபமாக பேசினால்
திமிர் பிடித்தவள்.....

கேட்டதிற்கு எல்லாம்
பதில் கூறினால் வாயாடுகிறவள்....

நேர்த்தியாக உடை அணிந்தால்
ஒப்பணைக்காரி.....

அவளுக்கு பிடித்தாற் போல்
இருந்தால் சுயநலக்காரி....

ஆண் நண்பன் இருந்தால்
வேசிக்காரி....

பிடித்ததை செய்தால்
பிடிவாதக்காரி....

கணவனோடு அன்யோன்யமாக
இருந்தால் கைகாரி....

வழக்காடினால் அடங்காபிடாரி....

தன்னை தற்காத்துக் கொள்ள
கோபத்தை முன் வைத்தாள்
முன் கோபக்காரி.....

தன்மானத்தை எதிர் பார்த்தாள்
தற்பெருமைக்காரி....

அப்பப்பா........ இன்னும் எத்தனை
பெயர்கள் தான் பெண்களுக்கு
இந்த மதி கெட்ட சமுதாயத்தில்...

பாரதியே ...
நீர் உந்தன் பாடல்களில்
சொன்ன புதுமை பெண்களை
இந்த சமூகம்
கண்டுவிட்டால் ஐயகோ...!!!!

நினைத்திடக் கூட முடியவில்லையே!!!

இந்த சமூகத்தில்
பெண்களை தீண்ட தகாத
ஒன்றாகவே ஒதிக்கி
விடுவார்களோ!!????!!!

ஒரு பெண்ணுக்கு தான்
எத்தனை இன்னல்கள்
இந்த சமூகத்தில்
இருப்பினும் இன் முகத்தோடு
தன் பணிகளை செய்கிறாள் சிறப்புற....

பெண்ணியம் தவறேள்!!!!!

இன்னும் எத்தனை
பிறவிகள் ஆயினும்
பெண்ணாகவே பிறந்திட
மன்றாடுகிறேன் இறைவனிடம் நான்!!!!

மானிடராய் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்
என்ற வரிகளை
"மங்கையறாய் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்"
என்று மாற்றினால்
பிழையேதும் அன்றோ!!!!!

Lines - Sunira

15-04-2019 03:07

 

4

 

3.00


Comments(

6

)


Sunira Sumi

ஆம் தோழியே சரிதான்...

1555352360

தன்யா செந

உண்மைதான்..தோழி...இதை எல்லாம் வெளியே சொன்னால் பைத்தியகாரி...

1555349648

Sunira Sumi

நன்றி கவியே..

1555337701

தேன்மொழி தமிழ்(தேன் கவி)

சூப்பர்..!!!!

1555309084

Sunira Sumi

மிக்க நன்றி!!

1555298310

ராஜாசெந்தில்குமார்

Extraordinary lines... super.

1555297950