OR

Show

Close


OR

Show

Close

Sennappan Kingston

வாழ்க்கை


கரைசேரா கன்னிகள்....

லட்சக் கணக்கில் இருந்த
வங்கியிருப்பு
இடந்தெரியாமல் போனது.
தவணையில் வாங்கிய மாருதியோ
தலவாசலில் நிற்கிறது
காஞ்சிபுரத்து பட்டுகள்
பீரோவில் நிறையவே..

வெள்ளிப் பாத்திரங்கள்
பித்தளைப் பாத்திரங்கள்
தினுசு தினுசாய்....

அம்மன் சிலையாய் நான்
அதிசயமாய் என்னுருவம்
ஆபரணத்தால்
அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணைப் பிளக்கும்
வாண வேடிக்கைகள்
தஞ்சாவூர் மேளதாளங்கள்
இந்திரன் சபையா இல்லை
நட்சத்திர வீதியா...
இமைக்க மறந்தனர்
இருபுறமும் கண்சிமிட்டும்
அலங்கார விளக்குகள்..
அடேங்கப்பா...

லட்சங்களையெல்லாம்
வாரியிரைப்பது எதற்காகவாம்
இருந்ததெல்லாம் கரைந்தது
இனியும் எதுவுமில்லை...

அறிமுகமேயில்லாத
ஆடவனொருவனிடம்
வாங்கப் போகும் தாலிக்காகத்தான்
இத்தனையுமாம்...
இங்கிதமாய்ப் பேசினார்கள்..
சுவையான கரும்பை
சுவைக்கத் தந்தால்
கூலியும் வேண்டுமாம்..
இதென்ன நியாயம்.

இத்தனையும் இல்லாமல்
கரைசேரா கன்னிகைகள்தான்
எத்தனை எத்தனை
பாரினில்.....

வாழ்க வளமுடன்....

ஸ்ரீ........




13-03-2019 23:37

 

1

 

3.00


Comments(

2

)


Sennappan Kingston

மங்கையின் குணத்திற்கு தான் முதலிடம். பணம் இரண்டாமிடம்தான். அக்காலத்தில்...இன்றோ நிலைமை தலை கீழாக.. எல்லாம் சிவ மயம்..

1552539283

kunguma kannika Maharajan

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டாம், மாதவள் தந்தையிடம் பணமிருந்தால் போதும்.

1552537266